×

புரவி புயல் எதிரொலி கரூரில் மிதமான மழை

கரூர், டிச. 3: புரவி புயல் சின்னம் காரணமாக கரூர் மாவட்டம் முழுதும் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நிவர் புயலை தொடர்ந்து கன்னியாகுமரி அருகே புரவி புயல் சின்னம் உருவாகி நாளை அதிகாலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தென் மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புயல் சின்னம் காரணமாக நேற்று காலை முதல் இரவு வரை அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. மேலும், வானம் மேகமூட்டத்துடன் வெயில் தாக்கமின்றி ஊட்டி, கொடைக்கானல் போன்ற சீதோஷ்ணநிலை நேற்று கரூரில் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Karur ,storm ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்