×

நல்லம்பள்ளி அருகே நாகாவதி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட கோரிக்கை

தர்மபுரி, டிச.3: நல்லம்பள்ளி ஒன்றியம் நாகர்கூடல் ஊராட்சியில், ஆத்துக்கொட்டாய் கோம்பை கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள இந்த கிராம மக்கள், அரசு பள்ளி, ரேஷன் கடை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, கழனிகாட்டூர் கிராமத்திற்கு தான் செல்ல வேண்டும். இந்த கிராமத்தின் வழியாக செல்லும் நாகவதி அணையின் ஆற்றுக்கால்வாயில், மழைக்காலத்தில் வெள்ளபெருக்கு ஏற்படும் போது மாணவர்கள், கிராம மக்கள் 7 கிலோ மீட்டர் சுற்றி தான், கழனிகாட்டூர் கிராமத்திற்கு வரவேண்டியது உள்ளது. இல்லையென்றால், ஆற்றுக்கால்வாயில் இறங்கி வரவேண்டி உள்ளது. கடந்த 2005ம் ஆண்டு முதல், இதுவரை 5பேர் ஆற்றுக்கால்வாயில் சிறுவர்கள், பெண்கள் 5பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்துள்ளனர். எனவே, ஆத்துக்கொட்டாய் கோம்பை- கழனிகாட்டூர் கிராமத்திற்கு ஆற்றின் குறுக்கே, மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று தர்மபுரி திமுக எம்எல்ஏ தடங்கம் சுப்ரமணி பாலம் அமைத்து தருவதற்கான, சாத்திய கூறுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, திமுக ஒன்றிய செயலாளர் சண்முகம், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் தங்கமணி ஆகியோர் உடனிருந்தனர்.



Tags : Nagavathi ,Nallampalli ,river ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை