×

3அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்

பென்னாகரம், டிச.3: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், 3அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி,  பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊர்வலமாக வந்து, பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் கரூரான் தலைமை வகித்தார். இதில், தெலுங்கானா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக 3000 வழங்குவது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும். கடுமையான ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகையினை ₹5ஆயிரமாக வழங்க வேண்டும்.ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016ன் படி தனியார் துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு, குறைந்தபட்சம் 5சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடாததால், 150மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். 16 பேருக்கு கொரோனாதர்மபுரி, டிச.3: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 6102 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5920பேர் குணமாகி வீட்டிற்கு திரும்பி சென்றனர். நேற்று ஒரேநாளில் 12பேர் குணமாகி வீட்டிற்கு சென்றனர். மொத்தம் 131பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ளார். மாவட்டத்தில் மொத்தம் 51பேர் இதுவரை கொரோனாவால்
பலியாகியுள்ளனர்.

பென்னாகரத்தில் திமுக
வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்பென்னாகரம், டிச.3:பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பென்னாகரத்தில் நேற்று நடந்தது. தர்மபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ  தலைமை வகித்தார். தர்மபுரி எம்பி டாக்டர்.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ஏரியூர் ஒன்றிய செயலாளர், மாவட்ட கவுன்சிலர் செல்வராஜ், நகர செயலாளர் வீரமணி, பொறுப்பு குழு உறுப்பினர் காளியப்பன், பொருளாளர் மடம் முருகேசன், தன்டாளன், சிகரலஅள்ளி சுரேஷ், பெரும்பாலை துரைசாமி, கவுன்சிலர் கார்த்திக், சேலம் ஓட்டல் வினு அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், வருகிற 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் சரிபார்ப்பு முகாமில் பெயர் சேர்த்தல் நீக்கல் பணிகளில், வாக்குசாவடி முகவர்கள் முனைப்போடு செயல்படுவது, மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் விடியலை நோக்கிய ஸ்டாலின் பயணத்தில் சிறப்பாக செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

Tags : Transgender Stirring Struggle ,
× RELATED ஒரு மாதத்திற்கு பிறகு ரூ.3 உயர்வு...