×

கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

கிருஷ்ணகிரி, டிச.3: கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணியை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.  கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புதியதாக வரபெற்றுள்ள 1860 மின்னணு வாக்கு இயந்திரங்கள் (விவிபேட் 1300, கன்ட்ரோல் யூனிட் 560) முதல் நிலை சரிபார்ப்பு பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பெட்டக அறையில் உள்ள இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணி பெல் நிறுவன தொழில்நுட்ப அலுவலர்கள் மேற்கொண்டனர்.  இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், கலெக்டர் துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியின் போது, கிருஷ்ணகிரி ஆர்டிஓ கற்பகவள்ளி, தாசில்தார் வெங்கடேசன், கலெக்டர் அலுவலக தேர்தல் தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Krishnagiri ,
× RELATED பெரம்பலூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி