×

ஓசூரில் டிவிஎஸ் நிறுவனம் ஓய்வு தொழிலாளர் சங்க 4ம் ஆண்டு துவக்க விழா

ஓசூர், டிச.3: ஓசூரில், டிவிஎஸ் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் நலச்சங்கம் 4ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.  ஐஎன்டியுசியின் தேசிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மனோகரன் தலைமை வகித்து துவக்க உரையாற்றினார். சங்க தலைவர் சுகுமாறன் வரவேற்றார். காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் விஜயபாஸ்கரன், டிவிஎஸ் தொழிற்சங்க தலைவரும், ஐஎன்டியுசி செயல் தலைவருமான குப்புசாமி, ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் பரமானந்தபிரசாத் ஆகியோர் பேசினர். அப்போது, பொருளாளர் பூபதி வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்தார். சங்க செயலாளர் பூரிஜெகநாதன் நிகழ்ச்சி நன்றி கூறினார்.

Tags : Hosur ,TVS Retirement Workers Union 4th Annual Launch Ceremony ,
× RELATED 10 மாதங்களுக்கு பிறகு ஓசூரில் உழவர் சந்தை திறப்பு