×

மத்திய அரசை கண்டித்து மாவட்டம் முழுவதும் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேந்தமங்கலம், டிச.3: டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசை கண்டித்து, சேந்தமங்கலத்தில் விவசாய சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சேந்தமங்கலம் தாலுகாவுக்குட்பட்ட முத்துகாப்பட்டி, பழையபாளையம், எருமப்பட்டி ஆகிய இடங்களில், டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது, தாக்குதல் நடத்திய மத்திய அரசை கண்டித்து, அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், மாவட்ட தலைவர் சதாசிவம், துணை தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். 2020 மின்சார சட்டத்தை செயல்படுத்தக்கூடாது எனக்கூறி கோஷங்கள் எழுப்பினர். இதில் சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு, நாமக்கல் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு  ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமையில் நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட  விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். அதேபோல், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, திருச்செங்கோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில், மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவேல் மற்றும் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராசிபுரம்: ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் மணிமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், வெண்ணந்தூர் ஒன்றிய துணைச் செயலாளர் செங்கோட்டுவேல், மீனா, மாவட்ட குழு உறுப்பினர் மீனா, ராசிபுரம் ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர் ராஜா, நகர பொருளாளர் சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம்: குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையில்,  அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் அமைப்பின் மாவட்ட பொருளாளர்  பாலசுப்ரமணியம் தலைமையில், திமுக நகர பொறுப்பாளர் செல்வம், ஏஐசிசிடியூ  மாவட்ட செயலாளர் சுப்ரமணி, படைவீடு பெருமாள், மதிமுக விஸ்வநாதன், எச்எம்எஸ்  செல்வராஜ், உஷா, தொமுச அருள் ஆறுமுகம், சிஐடியூ பாலு, ஏஐடியூசி நஞ்சப்பன்,  திமுக மகளிரணி அமைப்பாளர் ராதிகா சக்திவேல், சிபிஐ எம்எல் பொன் கதிரவன்,  திமுக இளைஞரணி அமைப்பாளர் சரவணன், மாணவரணி கார்த்தி மற்றும் ஏராளமான  தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு  தெரிவித்தனர்.
பள்ளிபாளையம் காவேரி ரயில் நிலையத்தில், மார்க்சிஸ்ட் ஒன்றியக்குழு உறுப்பினர் முத்துகுமார் தலைமையில், ஒன்றிய செயலாளர் ரவி, மாவட்ட குழு உறுப்பினர் மோகன், நிர்வாகிகள் அசன், குமார் உள்ளிட்டோரும், குமாரபாளையத்தில் நகர செயலாளர் கேசவன் தலைமையில் நகர துணை செயலாளர் மணி, முன்னாள் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Demonstrations ,unions ,district ,government ,
× RELATED வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாய சங்கங்கள் உறுதி