×

வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது

சேலம், டிச. 3:சட்டமன்ற தேர்தலின் போது, சேலம் மாவட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் நேற்று தொடங்கியது. தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்த, 7,303 வாக்குப்பதிவு இயந்திரம், 4,427 கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 4,751 விவிபேட் இயந்திரங்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ராமன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், இப்பணிகள் ெதாடங்கப்பட்டது. பெங்களூர் பெல் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர். சரிபார்க்கும் பணியின் போது, மின்னணு இயந்திரத்தில் பழுது ஏதேனும் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரி செய்து வைக்கப்படும். இப்பணிகள் முடிந்ததும், தேவையிருப்பின் கூடுதல் இயந்திரங்கள் வரவழைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை