×

இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில் கனிமொழி எம்பி முன்னிலையில் 300 பேர் திமுகவில் இணைந்தனர்

சேலம், டிச.3: சேலம் மாவட்டம் இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தேர்தல் பிரச்சாரம் கடந்த வாரம் துவங்கியது. இதில் திமுக மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற குழுவின் துணை தலைவருமான கனிமொழி எம்பி பிராசத்தை துவங்கினார். அப்போது, இருப்பாளி ஊராட்சியில் பனை ஏறும் தொழிலாளர்கள் மற்றும் பனை தொழில் முனைவோர் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது இடைப்பாடி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் சாமுண்டி மகனும், முன்னாள் ஊராட்சி ஒன்றியகுழு தலைவருமான காசி விஸ்வநாதன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி, கனிமொழி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்வகணபதி சால்வை அணிவித்து வரவேற்றார்.

Tags : constituency ,Interim Assembly ,Kanimozhi MP ,DMK ,
× RELATED விஎஸ்ஆர் ஜெகதீஸ் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்