×

குகன்பாறை- செவல்பட்டி சாலையில் எச்சரிக்கை பதாகை இல்லாததால் விபத்து அபாயம்

சிவகாசி, டிச. 3: குகன்பாறை- செவல்பட்டி சாலையில் எச்சரிக்கை பதாகைகள் இல்லாததால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை அருகேயுள்ளது குகன் பாறை கிராமம். இங்கிருந்து கோவில்பட்டி, சங்கரன்கோவிலுக்கு சாலை அமைத்துள்ளனர். முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ளதால் குகன்பாறை சாலையில் ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இதில் குகன்பாறையில் இருந்து செவல்பட்டி வரையிலான சாலை 7 மீட்டர் வரை அகலமுடையது. தற்போது இந்த சாலையில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் அசுர வேகத்தில் சென்று வருகின்றன. ஆனால் இச்சாலையில் அறிவிப்பு போர்டுகள், இரவில் ஒளிரும் ஸ்டிக்கர், டிவைடர் வெயிட் லைன் என எந்த வித எச்சரிக்கை பதாகைகளும் இல்லை. குறிப்பாக இரவில் வாகனங்கள் இச்சாலையை கடந்து செல்லும் போது இருபுறமும் உள்ள பள்ளங்கள் தெரிவதில்லை. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து வாகனஓட்டிகள் கூறுகையில், ‘இந்த சாலையில் வழக்கமாக செல்லும் வாகனஓட்டிகள் மட்டுமே எச்சரிக்கையுடன் சாலையை கடந்து செல்கின்றனர். வெளியூர் வாகனஓட்டிகள் கவனகுறைவாக வரும் போது அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. எனவே குகன்பாறை- செவல்பட்டி சாலையில் அறிவிப்பு போர்டுகள், சாலையில் இரவில் ஒளிரும் ரிப்ளக்டர்கள், சாலையின் இருபுறமும் வெள்ளை நிற கோடுகள் போன்ற விபத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பணிகள் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Tags : road ,Kuganparai-Sevalpatti ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...