×

கீழக்கரையில் பேரிடர் மீட்புக்குழு ஒத்திகை

கீழக்கரை, டிச.3:  கீழக்கரையில் பேரிடர் மீட்புக்குழு ஒத்திகை கூட்டம் நடைபெற்றது. வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் பேரிடர் காலங்களில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வது குறித்த கலந்தாய்வு கூட்டம் கீழக்கரை கடற்கரை ஜெட்டி பாலத்தில் நடைபெற்றது. நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் பூபதி தலைமை தாங்கினார். சப்.இன்ஸ்பெக்டர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
பேரிடரின் போது மீட்புக்குழுவினர் உடனடியாக மழை பாதுகாப்பு கவசத்தோடும், கையில் டார்ச் லைட்டோடும் கீழக்கரை நகராட்சி அலுவலகத்துக்கு விரைந்து செல்ல வேண்டும். அங்கே கொடுக்கப்படும் வழிகாட்டல் முறைப்படி மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா  தலைமையில் பேரிடர் மீட்பு படையினரை தயார் படுத்தி உள்ளனர். இதில் நன்கு நீச்சல் தெரிந்த இளைஞர்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

Tags : Disaster rescue team rehearsal ,
× RELATED கீழக்கரை அருகே ஆம்னி வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து