×

பாஜக கூட்டம்

தொண்டி, டிச.3:  தொண்டி அருகே நம்புதாளையில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முரளீதரன், மாவட்ட பொதுச்செயலாளர் குமார், மாநில இளைஞர் அணி செயலாளர் ஆத்மா கார்த்திக் முன்னிலை வகித்தனர். மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், நலத் திட்டங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். 200க்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். இதில் குட்லக் ராஜேந்திரன், மாநில மீனவரணி செயலாளர் மணிமாறன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : BJP ,meeting ,
× RELATED தொடர்ந்து 60 தொகுதி கேட்டு பிடிவாதம்:...