×

நத்தத்தில் சந்தன உரூஸ் விழா

நத்தம், டிச. 3:  நத்தம் பெரிய பள்ளிவாசலில் உள்ள சையது சாகுல் ஹமீது ஆஷிக்கீன் தர்ஹா சந்தன உரூஸ் விழா நடந்தது. இதையொட்டி நாகூரிலிருந்து கொண்டு வரப்பட்ட  புனித சந்தனம் நிரம்பிய குடத்தினை சுல்பிகர் தலையில் சுமந்து ஊர்வலமாக வந்தார்.  நடைமுறை சம்பிரதாயங்களின்படி தர்ஹாவில் புனித சந்தனம் பூசப்பட்டது. பின்னர் உலக நன்மை வேண்டி பிரார்த்தனை நடந்தது. கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்கும் விதமாக சந்தன உரூஸ் வைபவம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை வக்கீல் முகமது சாலியா, இன்ஜினியர் முகமது சாலியா, டாக்டர் நசீர் அகமது சையது  உள்ளிட்ட தர்ஹா நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Sandalwood Urus Festival ,Natham ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா