×

வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி


திண்டுக்கல், டிச. 3: வேளாண்மை துறை அட்மா திட்டம் மூலம் பட்டறிவு பயணமாக குஜிலியம்பாறை விவசாயிகளை ரெட்டியார்சத்திரம் கிட்டம்பட்டி அருகிலுள்ள ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர் சங்க நிறுவனத்திற்கு விவசாயிகளை அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சங்க தலைவர் கலைச்செல்வன் பேசுகையில், கூட்டு பண்ணைய திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மை பற்றியும், அரசாங்கம்  கூட்டு பண்ணைய திட்டத்தின் மூலம்  விவசாயிகளுக்கு தேவையான நிதி மற்றும் உழவு கருவிகள் வாங்க மானியம் வழங்குகிறது. அதை நாம் சரியாக பயன்படுத்தினால் நாமும் நம் கிராமமும் முன்னேற்றம் அடைய அரசாங்கம் உதவி செய்கிறது. விவசாயிகள் ஒன்று சேரும் போது தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகள் மற்றும் தானியங்கள் விற்பனை செய்வது எளிதாக உள்ளது என்று கூறினார்.

Tags :
× RELATED ஒலையூரில் வேளாண்துறை சார்பில்...