×

கொடைக்கானலில் புயல் முன்னெச்சரிக்கையால் சுற்றுலா தலங்கள் மூடல் சுற்றுலா பயணிகளுக்கும் எச்சரிக்கை

கொடைக்கானல், டிச. 3: கொடைக்கானலில் புயல் முன்னெச்சரிக்கையாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. அத்துடன் சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த 2 தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. மேகம் மூட்டத்துடன் உள்ளது. இந்நிலையில் தென் தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொடைக்கானல் வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா இடங்களான தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் ஆகிய சுற்றுலா இடங்கள் நேற்று மூடப்பட்டுள்ளது. கொடைக்கானலில் அடித்து வரும் காற்றின் காரணமாகவும், புயல் முன்னெச்சரிக்கை காரணமாகவும் மரங்கள் விழுந்து சுற்றுலா பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் சூழல் நிலவுகிறது. இதனால் சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளது.

இதுபற்றி கொடைக்கானல் வனத்துறை வனவர் அழகுராஜா கூறுகையில்,`` 15 மைல் சுற்றளவு கொண்ட சுற்றுலா தலங்களான மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை ஆகிய சுற்றுலா இடங்கள் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக இன்று(டிச.2) மூடப்பட்டு உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம்’’ என்று அவர் கூறினார். இதுபோல மன்னவனூர் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் ஏரியும் மூடப்பட்டுள்ளது. இதுபற்றி மன்னவனூர் ரேஞ்சர் ஞான பாலமுருகன் கூறுகையில்,  `` புயல் முன்ெனச்சரிக்கை காரணமாக மன்னவனூர் ஏரியும், மன்னவனூர் சுற்றுச்சூழல் பூங்காவும் மூடப்பட்டுள்ளது. எனவே, மன்னவனூர் சுற்றுச்சூழல் பூங்கா பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என்று’’ அவர் கூறினார்


Tags : Tourist places ,Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்