×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

மதுராந்தகம்:தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் சார்பில், மதுராந்தகம், பேருந்து நிலையம் அருகே போராட்டம்  நடந்தது. இதில், மாவட்ட குழு உறுப்பினர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் பாரதி அண்ணா, வெள்ளி கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர்  வாசுதேவன், சுமைப்பணி சங்க நிர்வாகி நடராஜ், ஜான் பாஷா, ரவீந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக 3000, கடும் ஊனமுற்றோருக்கு 5 ஆயிரமும்  வழங்க வேண்டும். தனியார் துறை வேலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். அரசுத்துறையில் காலிப்பணியிடங்களை கண்டறிந்து உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணியில் அமர்த்த வேண்டும்’  என மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திடீரென அவர்கள் மதுராந்தகம்-திண்டிவனம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து அவர்களை கைது  செய்து கல்யாண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். திருப்போரூர்: திருப்போரூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் அருள்ராணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் திருஞான சம்பந்தன், ஸ்டெல்லா  ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் லிங்கன் ஆகியோர்  மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.பேருந்து நிலையம் எதிரே ஓ.எம்.ஆர். சாலையில் 100க்கும்  மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், அவர்களை பாதுகாப்போர் மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து திருப்போரூர் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்து மாலையில் விடுவித்தனர்.

உத்திரமேரூர்:  உத்திரமேரூரில் நடைபெற்ற மறியல்  போராட்டத்தில் வட்டத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில செயலாளர்  வில்செட், மாவட்ட தலைவர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக மாற்றுதிறனாளிகள் உத்திரமேரூர் அம்பேத்கர் சிலை அருகே ஊர்வலமாக  துவங்கி பஸ் நிலையம் வரை நடந்து வந்து உத்திரமேரூர் செங்கல்பட்டு சாலையில்  மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.   போராட்டத்தில்  ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகளை உத்திரமேரூர் போலீசார் கைது  செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தன

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...