×

‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சிபோது மாற்று கட்சியில் இருந்து 200 பேர் திமுகவில் இணைந்தனர்

செய்யூர்,  டிச. 3: நுகும்பல் கிராமத்தில் திமுகவின் சார்பில் நடந்த, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். செய்யூர் தாலுகா சித்தாமூர் ஒன்றியம்  நுகும்பல் கிராமத்தில் நேற்று திமுகவின், ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.  அதில், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமை தாங்கினார். சித்தாமூர் ஒன்றிய செயலாளர் ஏழுமலை  வரவேற்றார். செய்யூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி.அரசு முன்னிலை வகித்தார். தலைமை கழக கொள்கை பரப்பு  செயலாளர் முனைவர் சபாபதி மோகன் கலந்து கொண்டார்.

அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முனைப்புடன் செயல்பட்ட நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து இந்நிகழ்ச்சியில்  மாற்று கட்சியில் இருந்து 200க்கும் மேற்பட்ட விலகி திமுகவில் இணைந்தனர்.  அவர்களுக்கு,  முனைவர் சபாபதி மோகன் சால்வை அணிவித்து கௌரவித்தார்.  இதில், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மாலிக்,   அவைத்தலைவர் வெங்கடகிருஷ்ணன், துணை செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட  பிரதிநிதிகள் தனசேகரன், பெருகிருஷ்ணன், பொருளாளர் சிற்றரசு, முன்னாள் ஒன்றிய செயலாளர் மகேந்திரன், கட்சி நிர்வாகிகள் ஜனனி,  நிர்மல் குமார், வேதாச்சலம், தர்மன், டைகர் குணா ஆகியோர் பங்கேற்றனர்.    

Tags : party ,DMK ,
× RELATED கனிமொழி எம்பி முன்னிலையில்...