×

மனைவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது

ஸ்பிக்நகர், டிச.3: தூத்துக்குடியில் மனைவியை  கொலைசெய்துவிட்டு இருமாதங்களாக தலைமறைவாக இருந்துவந்த தொழிலாளியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். தூத்துக்குடி, முத்தையாபுரம் தவசிப்பெருமாள் சாலை பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் கருப்பசாமி (45). கூலி தொழிலாளியான இவர், கடந்த செப். 29ம் தேதி தனது மனைவி சண்முகலட்சுமியின் (40) தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவானார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த  முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

 மேலும் இதுதொடர்பாக எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் டவுன் டிஎஸ்பிகணேஷ் மேற்பார்வையில் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் ஏட்டு ரவிக்குமார், முதல் நிலைக் காவலர் சங்கரசுப்பு உள்ளிட்டோர் கொண்டு அமைக்கப்பட்ட தனிப்படையினர், தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில் தூத்துக்குடி அருகே கடற்கரைப் பகுதியில் பதுங்கியிருந்த கருப்பசாமியை  நேற்று காலை போலீசார் கைதுசெய்தனர். இதையடுத்து தனிப்படையினரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

Tags :
× RELATED ஆசிட் குடித்த தொழிலாளி சாவு