உடன்குடி, டிச. 3: திருச்செந்தூரைச் சேர்ந்த தனியார் வானிலை ஆராய்ச்சியாளருக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, இலவச மடிக்கணினி வழங்கினார்.திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. தனியார் வானிலை ஆராய்ச்சியாளரான இவருக்கு வானிலை தொடர்பான ஆராய்ச்சி பணிகளுக்கு பல்வேறு தொழில்நுட்ப கருவிகள் தேவைப்பட்டன. இதையடுத்து தண்டுபத்தில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, இலவச மடிக்கணினி வழங்கினார்.