×

விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ₹10 லட்சம் நிவாரணம்

சென்னை, டிச.3: விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கெங்காவரம் கிராமத்தைச் சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சரவணன் என்பவர் வரவேற்பு பந்தலில் காற்று அடித்து கம்பம் சரிந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் ஆக மொத்தம் 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : victim ,district ,Villupuram ,
× RELATED மின்சாரம் பாய்ந்து பலியான குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்