×

முஷ்ணம் பூவராகசுவாமி கோயில் குளத்தில் தத்தளித்த மாணவன் மீட்பு

முஷ்ணம், டிச. 3: கோயில் குளத்தில் குளித்த மாணவன் நீச்சல் தெரியாமல் தத்தளித்த நிலையில் தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றினர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் ராகுல் (18) உள்பட 4 மாணவர்கள் கடலூர் மாவட்டம் முஷ்ணம் பகுதிக்கு சுற்றுலா வந்தனர். பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த அவர்கள் நேற்று காலை பூவராகசுவாமி கோயில் குளத்தில் இறங்கி குளித்தனர். அவர்களில் ஒரு மாணவர் நீச்சல் தெரியாமல் தத்தளித்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர். உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து  முஷ்ணம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராஜ்குமார் மற்றும் போக்குவரத்து பிரிவு புருசோத்தமன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்து நீரில் தத்தளித்து கொண்டிருந்த ராகுலை பத்திரமாக மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் முஷ்ணம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். துரிதமாக செயல்பட்டு மாணவன் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு படையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : மாணStudent ,pool ,
× RELATED தை அமாவாசையை முன்னிட்டு கமலாலய குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்