×

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

ஊட்டி, டிச. 3: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்தின் சார்பில் மாநில முழுவதும் 6 வயது முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணியானது கடந்த கடந்த 21ம் தேதி துவங்கியது. இக்கணக்கெடுப்பு டிசம்பர் 10ம் தேதி வரை நடக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் 4 வட்டாரங்களில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதி, கமர்சியல் சாலை, ஹோபர்ட் பள்ளி, காந்தல் ஆகிய பகுதிகளில் மேற்பார்வையாளர் மகேஷ்குமார் தலைமையில் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எமிமாலு, குழந்தைகள் உதவி மையம் பிரதீப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : children ,school ,
× RELATED பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட...