×

மண் குவியல்களை அகற்ற கோரிக்கை

ஊட்டி, டிச. 3: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட சேரிங்கிராஸ் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே கழிவு நீர் கால்வாய் ஒன்று உள்ளது. அந்த கால்வாயில் தூர் வாரப்பட்ட மண், சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ளது. மேலும், கால்வாயும் மூடப்பட்டுள்ளது. இதனால், கழிவு நீர் மற்றும் மழை நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே இந்த மண் குவியலை அகற்றி கால்வாயில் தூர் வார வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED பொங்கல் விடுமுறையை முன்னிட்டு...