×

கண்ணாடி மாளிகையில் 3 ஆயிரம் தொட்டிகளில் கள்ளிச்செடிகளின் அலங்காரம்

ஊட்டி, டிச. 3: நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த இப்பூங்காவில் பல்வேறு நாடுகளில் காணப்படும் பல வகையான தாவரங்கள், மலர் செடிகள், மரங்கள் மற்றும் மூலிகை தாவரங்கள், பெரணி தாவரங்கள் மற்றும் கள்ளிச் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இப்பூங்காவில் இதுவரை கள்ளிச் செடிகள் அங்காங்கே ைவக்கப்பட்டிருந்தன. எனினும், ஒரு சில ரகங்கள் மட்டுமே இருந்தன. மேல் கார்டனில் உள்ள கண்ணாடி மாளிகை தற்போது கள்ளிச் செடிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கண்ணாடி மாளிகையில் தற்போது 45 வகைகளை கொண்ட 3 ஆயிரம் தொட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பல வகையான கள்ளிச் செடிகளை அலங்கரித்து வைத்துள்ளனர். பல வடிவங்களில் காணப்படும் இந்த கள்ளிச் செடிகள், பாலைவனங்களில் காணப்படும் சில தாவரங்களும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. பண்ணி இயர்ஸ், சீனா, சகூரா, ஓல்டு லேடி, ஸ்டார், ஈஸ்டர், கிறிஸ்துமஸ் மற்றும் மூன் உட்பட பல்வேறு வகையான கள்ளிச் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. மலர்களை மட்டுமே கண்டு ரசித்து சென்ற சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு புதிய அனுபவமாக உள்ளது. மேல் கார்டனில் உள்ளதால், பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு இந்த கள்ளிச் செடி கண்ணாடி மாளிகை தெரிவதில்லை. தோட்டக்கலைத்துறையினர் இதனை பிரபலப்படுத்தினால், ஏராளமான சுற்றுலா பயணிகள்காண வாய்ப்புள்ளது. தற்போது முதல் சிசனுக்காக பூங்கா தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த கள்ளிச் செடி அலங்காரம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்