×

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிச.12, 13ம் தேதிகளில் சிறப்பு முகாம்

கோவை,டிச.3: கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள அறிக்ைக:இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டதன் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் செய்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்காக கடந்த நவம்பர் மாதம் 21 மற்றும் 22-ம்தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேலும், இம்மாதம் 12 மற்றும் 13-ம்தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் கணிணிமயமாக்கப்பட்டு கோவை மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்ட தங்கள் விண்ணப்பங்களின் விவரத்தினை https://coimbatore.nic.in/electiondepartment/ என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். விண்ணப்பத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய, உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : camp ,
× RELATED மாற்றுத் திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்