×

பூமார்க்கெட்டில் கலெக்டர் ஆய்வு

கோவை,டிச.3: கோவை மாநகர் தேவாங்கர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் பூமார்க்கெட் பகுதி மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேற்று நேரில் பார்வையிட்டார்.  பின்னர் அவர் கூறுகையில், ‘’கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை தவறாது பின்பற்ற வேண்டும். தவறினால், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்படும்’’ என்றார்.

Tags : Collector inspection ,Boomarket ,
× RELATED காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில்...