×

ஆனைகட்டி மழைவாழ் மக்கள் கோவை கலெக்டரிடம் மனு

கோவை, டிச. 3:  கோவை ஆனைகட்டியில் மலைவாழ் பெண்கள் நடத்திய ரேஷன் கடையை சொசைட்டியாக மாற்றியதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் மாவட்ட கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். இந்த மனுவில், ஆனைகட்டி பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களின் நலன்கருதி மகளிர்சுய உதவி குழுக்கள் மூலம் ஆனைகட்டி மற்றும் ஆலமரமேடு ஆகிய பகுதிகளில் ரேஷன் கடைகள் தர்சனா பெண்கள் சுய உதவிக்குழு என்ற பெயரில் கடந்த 20 வருடமாக நடத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடையை மலைவாழ் மக்களிடம் இருந்து கைப்பற்றி சொசைட்டியாக மாற்றும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதனை, தர்சனா மகளிர்சுய உதவி குழுவிற்கே வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Collector ,Anaikatti Rainfed People Coimbatore ,
× RELATED கிராம மக்கள் கலெக்டரிடம் மனு