×

பள்ளி மாணவியை கடத்திய வாலிபருக்கு போலீசார் வலை

கோவை, டிச.3: தூத்துக்குடி மாவட்டம் கோட்டக்குறிச்சியை சேர்ந்த தம்பதியினர் கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூரில் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு 12 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் அருகே உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இருவரும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்பில் பயின்று வந்தனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த தனியார் மில் ஊழியர் நாகராஜ்(22) என்பவர் 14 வயது சிறுமியுடன் நெருங்கி பழகியதாக தெரிகிறது. அப்போது அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் நாகராஜ் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கடத்தல் வழக்குபதிவு செய்து நாகராஜை தேடி வருகின்றனர்.

Tags : teenager ,
× RELATED ஆண்டிபட்டி அருகே ஏடிஎம் மையத்தில்...