×

போலீஸ்காரர் மீது கல்வீசி தாக்குதல்

கோவை, டிச.3: துடியலூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் மகாராஜன் (29). நேற்று முன் தினம் இவர் சக போலீஸ்காரர் சிவன் கார்த்திக் என்பவருடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது துடியலூர் பொதுக்கழிப்பிடம் அருகே மது போதையில் சிலர் தகராறு செய்தனர். இது குறித்து விசாரிக்க சென்ற மகாராஜனை 3 பேர் திடீரென கீழே கிடந்த கல்லை எடுத்து வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் மகாராஜன் நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்கு பதிவு ெசய்து வெள்ளகிணறு விசிவி தெருவை சேர்ந்த ஒர்க்ஷாப் உரிமையாளர் பாலசுப்பிரமணியம் (35),  அப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த மணிரத்தினம் (25), வடமதுரை வி.எஸ்.கே நகரை சேர்ந்த அஸ்வின் (20) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது  அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்தல், தாக்குதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags : attack ,policeman ,
× RELATED எழுமலை இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழப்பு