மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா

ஈரோடு, டிச. 3: ஈரோடு மாவட்டத்தில் நேற்று 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  தமிழக  சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியல் படி நேற்று ஈரோடு மாவட்டத்தில் மேலும்  47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி  மாவட்டத்தில மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,506 ஆக உயர்ந்துள்ளது.  சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் நேற்று 31 பேர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டதையடுத்து மொத்தம் இதுவரை 11,954 பேர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் 413 பேர் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில்  கடந்த ஒரு வாரகாலமாக கொரோனாவால் உயிரிழப்பு ஏதும் இல்லை  என்றும், பலி எண்ணிக்கை 139 ஆக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>