×

மது, லாட்டரி விற்ற 3பேர் கைது

ஈரோடு,  டிச. 3:  ஈரோடு மாவட்டம் கடத்தூர் பெரியார் நகர் எல்பிபீ வாய்க்கால் கரை  அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக நேற்று முன்தினம்  போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், அங்கு விரைந்து சென்று மது  விற்பனையில் ஈடுபட்டிருந்த உக்கரம் மேற்கு வீதியை சேர்ந்த பெரியமணி (50)  என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல்  செய்தனர். வீரணம்பாளையம் நால் ரோடு அருகே மது விற்ற விஜயமங்கலம்  மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சேகர் என்ற சண்முகம் (48) என்பவரை  பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.இதேபோல், பவானி டவுன் பகுதியில் தடை செய்யப்பட்ட  லாட்டரி சீட்டு விற்றதாக பழனிபுரத்தை சேர்ந்த சண்முகம் (72) என்பவரை பவானி  போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED மது, லாட்டரி விற்ற 5 பேர் கைது