×

வெற்றியை மட்டுமே நினைத்து அரசியல் கட்சி தொடங்கும் ரஜினியின் எண்ணம் தவறு

சென்னை: காஞ்சிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பேரவைக் கூட்டத்திற்கு பின்னர் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் வெற்றியும், தோல்வியும் இருக்கத்தான் செய்யும். மக்களைச் சந்திக்காமல், அவர்களது பிரச்னைகளை முழுவதுமாகவும் அறிந்து கொள்ளாமல் அரசியலுக்கு வர நினைக்கிறார் ரஜினி.

அதே நேரத்தில் ரஜினியின் எண்ணமும் வெற்றி பெறுவது மட்டுமே குறிக்கோளாக இருப்பது தவறான எண்ணமாகும். தேர்தலில் திமுக கூட்டணியைப் பொறுத்தவரை எந்த குழுப்பமும் இல்லை. கூட்டணி தொடர்பாக பல தவறான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எங்கள் கட்சியின் சின்னத்தில் தான் போட்டியிடும். வேறு சின்னங்களில் போட்டியிடாது என்றார்.

Tags : Rajini ,party ,
× RELATED எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்: ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை