×

ரயில் நிலையங்களில் மண்குவளையில் டீ, காபி: மத்திய அரசின் திட்டத்திற்கு நன்றி

சென்னை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் (குலாலர்) சங்க தலைவர் சேம.நாராயணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை;நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக மண்குவளையில் டீ, காபி வழங்கப்படும் என்றும், அனைத்து ரயில் நிலையங்களிலும் மண்குவளை பயன்பாட்டை கொண்டு வருவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். இதன் மூலம் உள்ளூர் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நல்ல முடிவை எடுத்து உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வந்த மத்திய அரசுக்கும், மத்திய ரயில்வே அமைச்சருக்கும் இந்தியாவில் மண்பாண்ட தொழில் செய்யும் 10 கோடி பேர் சார்பிலும், தமிழகத்தில் உள்ள 40 லட்சம் குலாலர் சமூக மக்களின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசின் இந்த முடிவை அனைவரும் வரவேற்பார்கள்.

Tags : railway stations ,ground ,government ,
× RELATED கலப்பட தேயிலை தூள் பயன்படுத்தி தேநீர் விற்றால் கடைகளுக்கு சீல்