×

மாற்றுத்திறனாளிகள் தினம் முதல்வர் எடப்பாடி வாழ்த்து

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கை: மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும் நலன்களையும் பேணிக் காத்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3ம் நாள் (இன்று) அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் வாழ்க்கையை சிறப்புற அமைக்கும் வகையில் தக்க ஆலோசனைகளை வழங்குவற்கு இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் மாநில ஆதார வள மையம் நிறுவியது.

மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடவும், சமுதாயத்தில் சம உரிமையுடன் வாழ்ந்திடவும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Edappadi ,
× RELATED ஜெயலலிதா பேசிய இடத்தில் எடப்பாடி நாளை பிரசாரம்