×

2.5 டன் குட்கா வேன் பறிமுதல்

வேளச்சேரி: அடையாறு சிக்னல் அருகே நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே வந்த 3 மினி வேன்களை மடக்கி சோதனை செய்தனர். அதில், 2.5 டன் குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், கோவில்பட்டியை சேர்ந்த ராமசாமி (45), பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து குடோனில் அடைத்து வைத்து,  புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்றது தெரிந்தது. இதையடுத்து, ராமசாமி, வேன் டிரைவர்களான அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் (27), மதுரவாயலை சேர்ந்த புஷ்பராஜ் (38), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இசக்கிமுத்து (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED 476 கிலோ குட்கா பறிமுதல்