×

பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அனுமந்த புத்தேரியை சேர்ந்தவர் தியாகு (எ) தியாகராஜன் (28.). நண்பர் கல்பாக்கம் அடுத்த காத்தான்கடையை சேர்ந்த சக்திவேல் ( 28). அடிக்கடி தியாகு வீட்டுக்கு, சக்திவேல் செல்வது வழக்கம். கடந்த 3 மாதத்துக்கு முன் தியாகுவுக்கு திருமணம் நடந்தது. அதன்பின்னர் சக்திவேல், தியாகு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று காலை தியாகராஜன் வேலைக்கு சென்றார். அவரது மனைவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற சக்திவேல், தியாகராஜனின் மனைவியை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, இளம்பெண்ணை மீட்டனர். புகாரின்படி செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை கைது செய்தனர்.

Tags :
× RELATED கவரிங் நகையை அடகு வைக்க முயன்ற பெண் கைது