×

செங்கல்பட்டு நகராட்சி 7வது வார்டில் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் மின் மோட்டார், கேபிள் பழுதால், 7வது வார்டு மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர் என தினகரனில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நகராட்சி சார்பில், டிராக்டர்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. செங்கல்பட்டு நகராட்சி 7வது வார்டு கங்கையம்மன் கோயில் தெரு, பச்சையம்மன் கோயில் தெரு, தூக்குமரகுட்டை ஆகிய பகுதிகளில் 2000 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் மின்மோட்டார் மற்றும் கேபிள் ஆகியவை கடந்த 10 நாட்களுக்கு முன் பழுதானது. இதனால் 7வது வார்டு மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்துள்ளனர் என நேற்றைய தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.

இதைதொடர்ந்து, செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி மற்றும் அதிகாரிகள், நேற்று காலை மேற்கண்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர், 7வது வார்டில் உள்ள அனைத்து தெருவில் வசிக்கும் மக்களுக்கு, டிராக்டர் மூலம் குடிநீர் வழங்க ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி கூறுகையில், செங்கல்பட்டு நகராட்சிக்கு வினியோகம் செய்யும் பழவேலி பாலாற்று பகுதியில், தற்போது வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அங்கு, பழுதாகியுள்ள மின் மோட்டாரை சரி செய்ய முடியவில்லை. தண்ணீர் குறைந்தவுடன் விரைவில் சீரமைக்கப்படும். அதுவரை டிராக்டர் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றார்.

Tags : ward ,municipality ,Chengalpattu ,
× RELATED தொண்டாமுத்தூர் பேரூராட்சி திமுக...