×

மக்கள் நல திட்டங்கள் பாஜ பிரசாரம்

கும்மிடிப்பூண்டி: பிரதமரின் ஜன் கல்யாண் கரி யோஜனா எனப்படும் 163 மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறும் பிரசார கூட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. பிரதமரின் ஜன்கல்யாண் கரி யோஜனா திட்ட விழாவில் திருவள்ளூர் மாவட்ட பொது செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார். முன்னதாக இணை செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். பாஜ கல்வியியல் பிரிவு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் திருமலை, மாவட்ட மகளிரணி செயலாளர் காஞ்சனா, மகளிரணி நிர்வாகி ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமரின் மக்கள் நல திட்டங்களை விளம்பரம் மற்றும் பிரச்சார அமைப்பின் தேசிய செயலாளரும், தமிழ்நாட்டு பொது செயலாளருமான டாக்டர் எம்.கே.ஆர்.ஜெய்கணேஷ் பங்கேற்று மகளிர் குழுவினரிடம் பேசும்போது, “பிரதமர் மக்கள் நலனிற்காக 163 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது ” என கூறினார்.

Tags : BJP ,campaign ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பா.ஜ...