×

எப்சி பெற புதிய கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி லாரி உரிமையாளர்கள் ஆர்டிஓ ஆபிசில் மனு

கிருஷ்ணகிரி, டிச.2: கிருஷ்ணகிரி மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில், மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் வட்டார போக்குவரத்து அலுவவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் தொழில் செய்ய முடியவில்லை. இந்நிலையில், தமிழக அரசு லாரிகளுக்கு ஜி.பி.எஸ்., வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் பட்டை உள்ளிட்டவைகளை குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடம், அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்கி பொருத்த வேண்டும் என லாரி உரிமையாளர்களை நிர்பந்தம் செய்கிறது. டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழ்நிலையில் அரசிற்கு கட்ட வேண்டிய வரிகள், இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகளைக் கட்ட முடியாமல் தடுமாறி வரும் நிலையில், குறிப்பிட்ட நிறுவனத்திடம் மட்டுமே வாங்க வேண்டும் என்பது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. எனவே ஜி.பி.எஸ்., வேக கட்டுப்பாட்டுக் கருவி, ஒளிரும் பட்டைகள் ஆகிவற்றை விரும்பும் இடத்தில் வாங்கவும், டீசல் விலையைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : RTO ,
× RELATED ஐதராபாத் எப்சி அசத்தல் வெற்றி