×

தனியார் கிரசரில் இரும்பு கம்பி திருடிய 3 பேர் கைது

கிருஷ்ணகிரி, டிச.2: உத்தனப்பள்ளியை அடுத்த வரகானப்பள்ளி பெரியநாகதோனை அருகே செயல்படாத தனியார் கிரசர் உள்ளது. இங்குள்ள இரும்பு பொருட்களை வாலிபர்கள் 2 பேர் திருடிக் கொண்டிருப்பதை கிரசர் காவலாளி கவனித்தார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் உதவியுடன், வாலிபர்கள் 2 பேரையும் பிடித்து, உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம்(35), அவரது தம்பி சதீஷ் (30) என்பதும், இவர்கள் திருட்டில் ஈடுபட கடூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (23) என்பவர் உதவியாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, வெங்கடாசலம், சதீஷ் மற்றும் சுரேஷ் ஆகிய 3 பேரையும், உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்தனர். இவர்களில் சதீஷ், மாத இதழ் ஒன்றில் நிருபராக பணியாற்றி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

24 பேருக்கு கொரோனா கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் நேற்று 24 பேர் கொரோனா பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.  சிகிச்சையில் குணமடைந்து நேற்று 20 பேர் வீடு திரும்பினர். மாவட்டத்தில்  இதுவரை 7 ஆயிரத்து 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 ஆயிரத்து 118  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 169 பேர் தற்போது சிகிச்சையில்  உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின்  எண்ணிக்கை 112 ஆக உள்ளது.சாலையின் நடுவில் தடுப்புகள் அமைப்பதை கைவிட கோரிக்கை கிருஷ்ணகிரி அனைத்து வணிகர் சங்கம் சார்பில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: கிருஷ்ணகிரி நகரத்தில் சென்னை சாலை மிகவும் குறுகலான சாலையாகும். இந்த சாலையை இரண்டாக பிரித்து தடுப்புகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி நகர வியாபாரிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சாலையை இரண்டாக பிரித்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். சாலையோரமுள்ள வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் சென்றுவர சிரமம் ஏற்படுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்க கூடிய சூழ்நிலை அதிகமாக உள்ளது. எனவே, சென்னை சாலையில் தடுப்புகள் அமைப்பதை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : crusher ,
× RELATED பெரம்பலூர் அருகே தனியார் கிரஷரில்...