×

மாவட்டத்தில் 580 மையங்களில்

கற்போம், எழுதுவோம் இயக்கம் தொடக்கம்
கிருஷ்ணகிரி, டிச.2: கிருஷ்ணகிரி ஒன்றியம் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி போகனப்பள்ளி அருகில் உள்ள ஆதியன் நகரில் கற்போம், எழுதுவோம் இயக்க மையம் தொடக்க விழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார்.  ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் மோகன், சரவணன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் நாராயணா, புள்ளியியல் டூல்ஸ், வட்டார கல்வி அலுவலர் மரியரோஸ், மேற்பார்வையாளர் கோதண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கற்போர்கள், தன்னார்வலர்களுக்கு புத்தகங்களை வழங்கி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேசினார். அவர் பேசுகையில்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 580 மையங்களில் கற்போம், எழுதுவோம் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் 580 தன்னார்வலர்கள் மூலம் 11 ஆயிரத்து 488 கற்போர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பொதுமக்கள் எழுத்தறிவின் அவசியத்தை உணரும் வகையில் வங்கி, அஞ்சல் நிலைய செயல்பாடுகள், சுயஉதவிக்குழு செயல்பாடுகள் குறித்து அறிய செய்ய வேண்டும் என்றார். அங்கிருந்த பொதுமக்கள், தங்களது குழந்தைகள் சாதிச் சான்றிதழ் இல்லாமல் கல்வியை தொடர முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக முதன்மை கல்வி அலுவலர் உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் பொறியாளர் சரவணன், காட்டிநாயனப்பள்ளி தலைமையாசிரியர் ஆண்ட்ரி மரியஜூலி, உதவி ஆசிரியர் ஹென்றி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : centers ,district ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!