×

பென்னாகரத்தில் முன்னாள் எம்எல்ஏ பெரியண்ணன் நினைவுநாள் அனுசரிப்பு


பென்னாகரம், டிச.2: தர்மபுரி மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பெரியண்ணனின் 11ம் ஆண்டு நினைவுநாள், பருவதன அள்ளியில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திமுக மண்டல தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பன்னீர்செல்வம் எம்எல்ஏ கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தர்மபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ, தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி எம்எல்ஏ, மாநில நிர்வாகிகள் முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், கீரை.விஸ்வநாதன், ராஜேந்திரன், முரளி, ஏரியூர் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட கவுன்சிலர் செல்வராஜ், நகர செயலாளர் வீரமணி, பொறுப்புக்குழு உறுப்பினர் காளியப்பன், பொருளாளர் மடம் முருகேசன், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், தன்டாளன், சிகரலஅள்ளி சுரேஷ், பெரும்பாலை துரைசாமி, கவுன்சிலர் கார்த்திக், சேலம் ஓட்டல் வினு அன்பழகன், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் ஒகேனக்கல் காளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், குடும்பத்தினர் ஜானகி பெரியண்ணன், டாக்டர் ராஜசேகர், தமிழாசிரியர் முனியப்பன், மோகனா முனியப்பன், பெரியண்ணன், பாலமுருகன், மணிமேகலை பெருமாள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags : MLA Periyanan ,Pennagaram ,
× RELATED வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 7ம் ஆண்டு நினைவு அஞ்சலி