×

எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து

தர்மபுரி, டிச.2: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து ஒட்டப்பட்டியில்  நடந்தது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், தர்மபுரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து ஒட்டப்பட்டி சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது. மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் உலகநாதன் வரவேற்று பேசினார். தடங்கம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்து, சமபந்தி விருந்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சீட்ஸ் தொண்டு நிறுவன நிர்வாகி சரவணன், டாக்டர் பிருந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மது, குட்கா விற்ற 63பேர் கைது 400 மதுபாட்டில்கள் பறிமுதல்