×

காங். சார்பில் ஏர் கலப்பை யாத்திரை

தர்மபுரி, டிச.2: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஏர் கலப்பை யாத்திரை நடந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு தலைமை வகித்து யாத்திரையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், வட்டா தலைவர்கள் நல்லம்பள்ளி கிழக்கு காமராஜ், நல்லம்பள்ளி மேற்கு மாதப்பன், தர்மபுரி வடிவேல், தர்மபுரி நகரத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட துணைத்தலைவர் வேணுகோபால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், நிர்வாகிகள் முத்து, சிவலிங்கம், குப்புசாமி, புவனேஷ், முருகன், பெரியசாமி, சக்திவேல், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Air Plow Pilgrimage ,
× RELATED ஆட்சியாளர்கள் மீது குற்றச்சாட்டு...