×

டெல்லியில் போராட்டம் நடத்திய இருவர் கைது விவசாயிகள் மீது தாக்குதல் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, டிச. 2: டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை தாக்கியதை கண்டித்து தஞ்சை மாவட்டம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை தாக்கியதை கண்டித்து தஞ்சை தபால் நிலையம் முன் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். மாவட்டக்குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் மாலதி முன்னிலை வகித்தார். போராட்டத்தை மாவட்ட செயலாளர் நீலமேகம் துவக்கி வைத்தார். போராட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். ரத்து செய்த இலவச மின்சாரத்தை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டிப்பது. டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது என்று கோஷமிட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமிநடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 38 பெண்கள் உட்பட 82 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது மாவட்ட செயலாளர் நீலமேகம் கூறுகையில், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார். தஞ்சை தபால் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரமோகன், கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தஞ்சை அடுத்த அம்மாப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாரதி உரையாற்றினார். விவசாயிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏர்கலப்பை, மண்வெட்டியுடன் நெல் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் ஒரத்தநாட்டில் ஒன்றிய செயலாளர் சீனிமுருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கும்பகோணம்: கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் மதியழகன் தலைமையில் திரளானோர் பங்கேற்றனர். திருவிடைமருதூர் தாசில்தார் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலக்குழு உறுப்பினர் ஜீவபாரதி தலைமையில் திரளானோர் பங்கேற்றனர். கும்பகோணம் காந்தி பூங்கா முன் சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கண்ணன், மாவட்ட துணைத்தலைவர் ஜீவபாரதி, சாலை போக்குவரத்து தொழிலாளர் மாநில செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி கடைவீதி அரசு பொது மருத்துவமனை அருகில் பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பூதலூர் ஒன்றிய சிபிஐ செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் திரளானோர் பங்கேற்றனர். அப்போது வேளாண் சட்ட திருத்தத்தை திரும்ப பெறும் வரையில் 10ம் தேதி முதல் பூதலூர் ஒன்றிய அனைத்து ஊராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

பேராவூரணி: பேராவூரணி பெரியார் சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜமாணிக்கம், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மாநிலக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி கூறுகையில், போராடி வருகிற விவசாயிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைத்து பேசுவது சரியல்ல. எந்தவிதமான நிபந்தனையின்றி 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் அனைத்து மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் ஒன்று திரண்டு டெல்லியில் இதைவிட மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவோம் என்றனர்.

Tags : Communists ,attack ,Delhi ,
× RELATED பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா...