ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர் கைது டெக்கரேசன் நிறுவன உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் கைது

தஞ்சை, டிச. 2: தஞ்சை அருகே டெக்கரேசன் நிறுவன உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் கைது செய்யப்பட்டார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு நாடார் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (41). யாகப்பாநகரில் டெக்கரேசன் நிறுவனம் வைத்துள்ளார். இவர் வாடகை பொருள் உரிமையாளர் சங்க மாவட்ட அமைப்பு செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி நித்யா (35). ராகவி (7), ராகவ் (1) என்ற குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தஞ்சையை சேர்ந்த கவிதாவுடன் (42) மணிகண்டன் 7 ஆண்டுகளாக பழகி வந்தார். கடந்த 29ம் தேதி கவிதா வீட்டுக்கு சென்ற மணிகண்டன், அங்கு மாடியில் மர்மமான முறையில் துாக்கில் தொங்கினார்.

இதுகுறித்து தஞ்சை தெற்கு போலீசில் நித்யா புகார் செய்தார். அதில் தனது கணவர் சாவுக்கு கவிதா தான் காரணம், அவர் அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து தெற்கு போலீசார், மணிகண்டனை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிந்து கவிதாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கொரோனா ஊரடங்கால் தொழில் இல்லாததால் மணிகண்டன் சிரமப்பட்டார். மேலும் கடன் தொல்லையும் இருந்துள்ளது. இதனால் கவிதாவிடமும் பணம், நகைகளை மணிகண்டன் வாங்கினார். கடந்த 29ம் தேதி மணிகண்டனிடம் பணம், நகைகளை திருப்பி தருமாறு கவிதா கூறியதால் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மணிகண்டனை வீட்டை விட்டு வெளியே போ என கூறி கதவை கவிதா சாத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த மணிகண்டன், கவிதாவின் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Related Stories: