×

சாலையில் மரங்களை போட்டு மறியல் சிவகாசி அருகே பரபரப்பு

சிவகாசி, டிச. 2:  சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் கங்காகுளம் கிராமம் உள்ளது.  இந்த கிராமத்தில் ஊர் புறம்போக்கு இடம் 10 சென்ட் உள்ளது. இதை அதே பகுதியை சேர்ந்த தனிநபர் பட்டா போட்டு வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தனிநபருக்கு விதிகள் மீறி பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், பட்டாவை ரத்து செய்து இடத்தை ஊர்மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று இப்பகுதி மக்கள் செங்கமலநாச்சியார்புரம்- திருவில்லிபுத்தூர் சாலையில் கற்கள், மரங்கள் மூலம் தடுப்பு ஏற்படுத்தி மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சிவகாசி சப்கலெக்டர் தினேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வாரத்தில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் இப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road ,Sivakasi ,
× RELATED சிவகாசி நகரில் கிடப்பில் போடப்பட்ட சுற்றுவட்ட சாலை திட்டம்