×

தாயின் கள்ளக்காதலனை குத்தி கொன்ற மகன் ராஜபாளையத்தில் பயங்கரம்

ராஜபாளையம், டிச. 2:  ராஜபாளையத்தில் தாயின் கள்ளக்காதலனை மகன் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தெற்கு மலையடிபட்டி எம்ஜிஆர் நகர் பின்புறத்தில் வசித்து வருபவர் ராமர் (56). இவர் அதே பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (46) என்பவரிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதுதொடர்பாக இருவீட்டாருக்கும் அடிக்கடி பிரச்னைகள் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாரியம்மாள் மகன் மாடசாமி மதன் (25), ராமரிடம் தாயுடன் வைத்துள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு எச்சரித்துள்ளார்.

இதற்கு ராமர் மறுப்பு தெரிவிக்கவே, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் கைகலப்பு ஏற்பட்டதில், மாடசாமி மதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த ராமர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்ததும் ராஜபாளையம் டிஎஸ்பி நாகசங்கர், தெற்கு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ராமரின் உடல் பிரேத பரிசோதனைக்க ராஜபாளையம் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, மாடசாமி மதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாயின் கள்ளக்காதலனை மகன் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : lover ,Rajapalayam ,
× RELATED மனைவியை குடும்பம் நடத்த அனுப்பாததால்...