×

ராஜபாளையத்தில் தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி ஒருவர் கைது

விருதுநகர், டிச. 2:  ராஜபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் தபால் துறையில் காண்ட்ராக்ட் சப்ளையர் பணி செய்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவர் தனது மகன்கள் பாலா வைரவநாதன், விக்னேஸ்வரர் ஆகியோருக்கு தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சி சுந்தரத்திடம், மாரியப்பன் ரூ.10 லட்சம் பணத்தை வாங்கினார். ஆனால் வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் தராமல் இழுத்தடித்து வந்தார். இதுபற்றி மாரியப்பனிடம் தொடர்ந்து கேட்டபோதும் எந்தவித பதிலும் இல்லை. இதுகுறித்து மீனாட்சிசுந்தரம் விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் கடந்த 2019ல் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று மாரியப்பனை கைது செய்து, கிளை சிறையில் அடைத்தனர்.

Tags : fraudster ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் இன்று மின்தடை