×

மாவட்டம் முழுவதும் 16 பேர் மீது குண்டாஸ்

சிவகங்கை, டிச.2:சிவகங்கை மாவட்டத்தில் 49 போலீஸ் ஸ்டேசன்கள் உள்ளன. சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை உள்பட ஐந்து சப் டிவிசன்களாக இந்த போலீஸ் ஸ்டேசன்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடங்களாக சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை சப் டிவிசன்கள் உள்ளன. இந்த ஆண்டு 16 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சிவகங்கையில் 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. மானாமதுரையில் 8பேர், காரைக்குடியில் இருவர் என மொத்தம் 16பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. கொலை, கொலை முயற்சி, பாலியல் பலாத்காரம் உள்பட சட்டம் ஒழுங்கு பிரச்னையில் சம்பந்தப்பட்ட 13 பேர், திருட்டு, வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசார் கூறியதாவது,‘சிவகங்கை மாவட்டத்தில் சமூக விரோதிகள், ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேசன்களிலும் சமூக விரோதிகள், ரவுடி லிஸ்டில் உள்ளவர்கள், கூடுதல் வழக்கு உள்ளவர்கள் விபரம் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். தற்போது போக்சோ பிரிவில் கைது செய்யப்படுபவர்கள் மற்றும் மணல் கடத்தலில் கைது செய்யப்படுபவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்படுகிறது. இவர்கள் தவிர பிற வழக்குகளில் ஒவ்வொருவர் மீதும் குறைந்தபட்சம் 5 வழக்குகளுக்கு மேல் உள்ளது என்றனர்.

Tags : district ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...