×

துபாய் டூ மதுரை சிறப்பு விமானம்

அவனியாபுரம், டிச. 2:  கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைகள் வரும் டிச.31 வரை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து மதுரைக்கு வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி கிழமைகளில் ஏர் இந்தியா சிறப்பு விமானம் இயக்கவுள்ளது. மேலும் மற்றொரு விமானம் துபாயிலிருந்து சென்னை வழியாக மதுரைக்கு ஞாயிறு அன்றும், மதுரையிலிருந்து துபாய்க்கு புதன் அன்றும் இயக்கவுள்ளது. அதேபோல் அபுதாபியிலிருந்து ஞாயிறு அன்றும், சிங்கப்பூரில் இருந்து சனி அன்றும் மதுரைக்கு ஏர் இந்தியா சிறப்பு விமானங்களை இயக்குகிறது. ஏற்கனவே ஸ்பைஸ் ஜெட் விமானம் துபாய்- மதுரை விமான சேவையை ஞாயிறு, செவ்வாய், வியாழன் கிழமைகளில் வழங்கி வருகிறது. மேலும் ஸ்பைஸ்ஜெட் தனது செய்தி குறிப்பில் வரும் 5ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை பெங்களூர்- மதுரை- பெங்களூர் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவி–்த்துள்ளது.

Tags : Dubai ,Madurai ,
× RELATED துபாயிலிருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 100 கிராம் தங்கம் பறிமுதல்..!!